குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள திரங்கா பேரணி காரணமாக ஹைதராபாத்தின் பல பகுதிகளிலுள்ள கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பல்வேறு இஸ்லாமிய குழுக்கள் இணைந்து, குடியுரிமை திருததச் சட்டத்துக்கு எதிராக இன்று நடத்தும் பேரணி காரணமக சரித்திர புகழ்பெற்ற சார்மினாரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பழைய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பேரணி காரணமாக தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி ஹைதராபாத்தின் மிர் ஆலம் எட்காவில் தொடங்கி சாஸ்திரி புரத்தில் நிறைவடையும். மாலை ஐந்து மணிக்கு நிறைவடையும் இந்தப் பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடக்க இருக்கிறது.
ஹைதராபாத்தின் நாம்பள்ளி, மல்லேபள்ளி, ஆசிப் நகர், மெஹ்திபட்டினம், மசாப் டேங்க், டோலி சவுக்கி மற்றும் கோல்கொண்டா ஆகிய பகுதிகளிலுள்ள கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தப் பேரணிக்கு பல வர்த்தக சங்கங்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன.
மேலும், இந்தப் பேரணிக்கு வழக்கறிஞர்களும் ஆசிரியர்களும்கூட தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர். ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற 'மில்லியின் மார்ச்' பேரணியைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய போராட்டம் இதுவாகும்.
இந்த பேரணியில் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, தெலங்கானா சட்டபேரவை எ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஓவைசி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த ஹமீத் முகமது கான் உட்பட பல தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் மீளும் - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை