மும்பை: சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சார்நைக் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், பாகிஸ்தான் நாட்டு கிரெடிட் கார்ட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் ட்வீட் செய்ததாக கூறி, அவர் மீது சார்நைக் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "என்னிடம் பாகிஸ்தான் நாட்டு கிரெடிட் கார்ட் இல்லாத நிலையில், என்னை குறித்தும் எனது குடும்பத்தார் குறித்தும் அவதூறு பரப்புவதற்காகவே சிலர் இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். சோதனையின் போது அமலாக்கத் துறையினர் பாகிஸ்தான் கிரெடிட் கார்ட் எதையும் பறிமுதல் செய்யவில்லை.
இவ்வாறு தகவல் பரப்பும் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரது மீதும் அவதூறு வழக்கு தொடர உள்ளேன். அதேபோல் ட்விட்டரில் தவறான தகவல் பரப்பிய கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்" என்றார்.
மேலும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தானும், தனது குடும்பத்தாரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை!