கேரளாவில் நடந்த அனைத்து இந்திய மீனவா் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, மக்களவை தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்குவேன் என்று உறுதியளித்தார்.
மேலும் அவா், மோடி தந்த பொய் வாக்குறுதிகள் போல் தான் பொய் சொல்ல மாட்டேன் என்றும், ஆட்சிக்கு வந்த முதல் வேலையே மீன்வளத்துறை அமைச்சகம் அமைப்பதுதான் என்றும் கூறியுள்ளாா். கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.