மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் (BSE - Sensex) வர்த்தக நாள் தொடக்கத்தில் 126 புள்ளிகள் உயர்வுடன் 38,512 ஆக வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி (NSE - Nifty) 40 புள்ளிகள் உயர்வுடன் 11,561ஆக வர்த்தகமானது.
இந்தியாபுல்ஸ் ஹவுசிங், என்.டி.பி.சி., யெஸ் வங்கி, கிராசிம் இண்டஸ்டிரீஸ், பஜாஜ் பின்செர்வ், எல் அண்ட் டி, ஜெ.எஸ்.டபிள்யு. ஸ்டீல்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகளின் குறியீடுகள் உயர்ந்திருந்தன.
அதேபோல் கோல் இந்தியா (Coal India), டிசிஎஸ், மாருதி சுஸுகி, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி இன்ஃபிராடெல், விப்ரோ பங்குகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது.