ETV Bharat / bharat

கடமை தவறிய அரசு அலுவலர்கள் இருவர் இடைநீக்கம்!

டெல்லி: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடமை தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உயர் அலுவலர்கள் மீது மத்திய உள் துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடமை தவறியதாக இரு அரசு அலுவர்கள் இடைநீக்கம்!

author img

By

Published : Mar 30, 2020, 1:38 PM IST

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதால், பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில், பொது சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நடவடிக்கை உள்ளிட்டவற்றை உரியமுறையில் எடுத்து மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறியதாகக் கூறி டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித் துறையின் முதன்மைச் செயலர் ஆகிய இருவரையும் மத்திய உள் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.

டெல்லி உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர், சீலம்பூர் சார் கோட்டாட்சியர் ஆகியோர், விளக்கமளிக்கவும், நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் பகிர்ந்த யோகா வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.