பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது ஜனவரி 3ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டிக்கும்விதமாக, பஜ்ரங் தள், துர்கா வாகினி உள்ளிட்ட அமைப்புகள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டம் வன்முறையாக வெடிக்க அமைப்பின் உறுப்பினர்கள், பாதுகாப்புப் படையினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!