ETV Bharat / bharat

ஆந்திரா நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

டெல்லி : ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்கும் முயற்சிக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆந்திரா நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
ஆந்திரா நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
author img

By

Published : Aug 26, 2020, 4:53 PM IST

ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் ஹைதராபாத் தெலங்கானாவின் வசம் சென்றது.

இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச அரசு விஜயவாடா - குண்டூர் இடையே புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடத்தைத் தேர்வு செய்து அதற்கு 'அமராவதி' என பெயர் சூட்டியது.

இந்நிலையில், கடந்த 2019 ஏப்ரலில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன்பிறகு ஆந்திரப்பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவித்தார்.

அதன்படி அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கும் பணியில் இறங்கினார்.

இது குறித்து மக்கள் கருத்தை அறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஜி.என்.ராவ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், தனது அறிக்கையை அளித்தது. அதனை ஆராய்ந்த அரசின் உயர்நிலை ஆய்வுக்குழுவும் இதனை கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உறுதி செய்தது.

மக்களின் அமோக ஆதரவு இருப்பதாக கூறிய அந்த இரண்டு அறிக்கைகளின் அடிப்படையில் 3 தலைநகர்களுக்கான மசோதா இந்தாண்டு ஜனவரியில் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மேலவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த அவையில் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

பின்னர், ஆந்திரப்பிரதேசத்தின் மேலவை கலைக்கப்பட்டதை அடுத்து ஜூன் 16ஆம் தேதி 3 தலைநகர் களுக்கான மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜூன் 30ஆம் தேதியன்று வெற்றிகரமாக ஆந்திரப்பிரதேச ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிசந்தனிடம் ஒப்புதலையும் பெற்றது.

இதற்கிடையே, 3 தலைநகர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமராவதியில் மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

அத்துடன் தெலுங்குதேசம் கட்சி உட்பட பலர் இத்திட்டத்தை எதிர்த்து ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்கவும், சிஆர்டிஏ எனப்படும் முந்தைய அரசின் தலைநகர் கொள்கை சட்ட ஒழிப்பிற்கும் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில், ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம் ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

ஆந்திரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி, "ஆந்திரப் பிரதேச அரசின் நிர்வாக எளிமைக்காகவும், மக்களின் வசதிக்காகவும் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் ஆயத்தப் பணிகளை அரசு ஏற்கனெவே தொடங்கிவிட்டது. அரசின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான முடிவுகளில் நீதித்துறை இதுவரை தலையீடு செய்ததில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அரசுத் தரப்பு வாதத்தை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசின் மனு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.