ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரின் பல முக்கிய தலைவர்களும் அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனுவை உமர் அப்துல்லாவின் சகோதரியும் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டின் மனைவியுமான சாரா பைலட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் உமர் அப்துல்லாவை தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்ட விரோதம் என்றும் உமர் அப்துல்லாவால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது குறித்து மார்ச் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஜம்மு காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்