டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு வரும் 20ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
முன்னதாக நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தங்கள் வழக்கை வழக்கறிஞர் தான் தவறாக வழிநடத்தி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதாவது சீராய்வு மனு, கருணை மனு தாக்கல் செய்தபோது அதில் இருக்கும் அம்சங்களைத் தனக்கு தெரிவிக்கவில்லை. எனவே சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்...