ETV Bharat / bharat

சிபிஐ, என்ஐஏ அலுவலகங்களில் சிசிடிவி நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவு - சிபிஐ, என்ஐஏ அலுவலகங்களில் சிசிடிவி

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்பு அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Dec 3, 2020, 11:47 AM IST

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ உத்தரவிட வேண்டும் என்று பரம்வீர் சிங் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. (சிறப்பு விடுப்பு மனு) தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, "இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின்கீழ் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்க அறிவுறுத்தி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த விவகாரத்தில் எந்த ஒரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்பு அலுவலகங்களில் அரசு நிர்வாக அலுவலர்கள் / காவல் துறை உயர் அலுவலர்கள் சிசிடிவி நிறுவ வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை விரைவில் செயல்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டது.

ஒவ்வொரு மாநில / யூனியன் பிரதேசத்தின் முதன்மைச் செயலர் / அமைச்சரவைச் செயலர் / உள் துறைச் செயலர் ஆகியோர் இது தொடர்பாக ஆறு வார காலத்திற்குள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், சிபிஐ, அமலாக்கத் துறை, பிற புலனாய்வு அமைப்புகளால் மனித உரிமை மீறல் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்தை அறிந்துகொள்வதற்காக சிசிடிவி விசாரணையின் நகலைப் பெற உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: 'யு-டர்ன் சர்க்கார்' - மத்திய அரசை சாடும் காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.