ETV Bharat / bharat

மோடி, அமித் ஷாவுக்கு எதிரான புகார்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், இரு தலைவர்களின் விதி மீறல்களையும் பற்றி வரும் 6ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
author img

By

Published : May 2, 2019, 7:02 PM IST

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் 11 புகார்கள் அளிக்கப்பட்டன.

புகார்களின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த எம்பியும், மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ், மோடி, அமித் ஷாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மோடி, அமித் ஷா மீது அளிக்கப்பட்ட புகார்களில், இரண்டில் மோடியை மட்டும் விடுவித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, அனைத்து புகார்கள் மீதும் வரும் 6ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையையும் வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Intro:Body:

model code of complaint on amit shah and modi by congress

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.