பிகார் மாநிலம் சரண் மாவட்டத்திலுள்ள இசுவாபூர் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. அந்தக் களத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிப்பது வழக்கம்.
இந்நிலையில், அக்குளத்திற்கு குளிக்கச் சென்ற ஏழு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதையடுத்து, உடல்களை அப்பகுதி மக்கள் மீட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறன்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.