ETV Bharat / bharat

டெல்லி கலவரத்திற்கு காரணம் சில கட்சிகள்தான் - மத்திய அமைச்சர் - மத்திய உள் துறை இணை அமைச்சர்

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணம் சில கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பிய வதந்தியே காரணம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Kishan Reddy
Kishan Reddy
author img

By

Published : Mar 2, 2020, 7:23 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இதனால் வடகிழக்கு டெல்லியிலுள்ள பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று டெல்லி இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, "டெல்லியில் கடந்த வாரம் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் ஏற்பட்டன. சில குறிப்பிட்ட கட்சிகளும் ஊடகங்களும் பரப்பிய வதந்திகளாலேயே டெல்லி கலவரம் ஏற்பட்டது.

இந்தக் கலவரத்தை யாரேனும் திட்டமிட்டு பரப்பியிருந்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்தக் கலவரத்தால் அனைத்து சமுதாய மக்களும் உயிரிழந்துள்ளனர். அதேபோல துணிச்சலான ஒரு காவலரும் புலனாய்வு துறை அலுவலரும் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவொரு இந்தியனும் தங்கள் குடியுரிமையை இழக்கப்போவதில்லை என்று தெரிவித்த அவர் சிஏஏ மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் சிறுபான்மையினருக்கு எளிதில் குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டர்பன்களை வழங்கி இஸ்லாமியர்களைக் காப்பாற்றினோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.