ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், உத்தரப்பிரதேச மாநில அரசின் அனுமதிபெற்று, பேருந்தின் மூலம் அவர்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பேருந்தின் தரம் சரியில்லை என்று உத்தரப்பிரதேச அரசு குறை கூறி, அவர்கள் வருவதை மாநில எல்லையில் தடுத்துள்ளாக ராஜஸ்தான் மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு வரும் ஜுன் 30ஆம் தேதி வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏற்றி செல்லும் பேருந்துகளுக்கு உரிமம், தரம் ஆகியவற்றைப் பார்க்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்க, இவ்வாறு உத்தரப்பிரதேச அரசு நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பிவைக்க ஒரு சீரான திட்டம் இல்லாமல், காங்கிரஸ் கட்சியை அவ்வப்போது குற்றம்சாட்டி பாஜக தேவையில்லாத அரசியல் செய்கிறது என ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.