புதுச்சேரியில் 260 ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆன்லைன் மூலம் உணவுகள் வாங்கும் தனியார் நிறுவனங்கள், நுகர்வோர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாளையும் ஆன்லைன் மூலம் உணவுகளை விற்கப் போவதிலை என தெரிவித்துள்ளனர்.
இதனால் புக்கிங் செய்ய வரும் ஸ்விக்கி, உபர், சொமெட்டோ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இரண்டு நாட்களுக்கு உணவு வழங்கப்படாது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.