நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை செயலி மூலம் கண்டறியும் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து RMRC இயக்குநர் டாக்டர் சங்கமித்ரா பதி கூறுகையில், " நார்வே-இந்திய அரசாங்கம் இணைந்து கரோனா தொற்றை கண்டறியும் செயலியை வடிவமைத்துள்ளது. இதில் வைரஸால் பாதிக்கப்படாதவர்கள் தங்களது இருமல் ஒலியை பதிவு செய்கிறார்கள். அதே சமயம், ஆராய்ச்சியாளர்கள் கரோனா நோயாளிகளின் இருமல் ஒலிகளையும் ஏற்கனவே சேகரித்துள்ளனர். எனவே, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிக்க இருமல் ஒலி மாதிரிகளை AIஐ பயன்படுத்தி பகுப்பாய்வு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் நிமோனியா நோயாளிகளின் எக்ஸ்ரே ஆய்வு எது உண்மை, எது பொய்யானது என்பதை கண்டறிய உதவியது" என்றார்.