விவசாயம் சாரா சொத்துக்கள் தொடர்பான விவரங்களை மக்கள் தானாக பதிவு செய்வதற்காக தரணி இணையதளத்தை தெலங்கானா மாநில அரசு தொடங்கியது.
இந்த இணையதளத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வரை இதன் சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தரணி இணையதளம் கடந்த வெள்ளியன்று (டிச.11) டெமோவிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த மூன்று நாள்களாக தெலங்கானா பதிவுத்துறை இதன் செயல்பாடுகளைக் கண்காணித்தப் பின்னர், இன்று (டிச.14) மீண்டும் தரணி இணையதளம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
தரணி இணையதளத்தில் விவசாயம் சாராத நிலத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதும், விவசாய நிலங்களையும், விவசாயம் சாராத நிலங்களை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பதிவு முடிந்தவுடன் விவசாயம் சாரா சொத்து உரிமையாளர்களுக்கு ஈ-பாஸ்புக்கும், பட்டாவும் வழங்கப்படும்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் இணையதளத்தின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.