குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்று வருகிறது. இதில் கடந்த முறை அமைச்சராக இருந்த பலரும் இம்முறையும் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
அந்த வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருந்த ராம்தாஸ் அத்வாலே இன்று மீண்டும் இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.