ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் பதவிக்காலம் முடியவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

TN Rajya sabha election 2020
TN Rajya sabha election 2020
author img

By

Published : Mar 6, 2020, 10:28 AM IST

மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 55 மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையவுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி சிவா (திமுக), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), விஜிலா சத்யானந்த் (அதிமுக), செல்வராஜ் (அதிமுக), முத்துக்கருப்பன் (அதிமுக), சசிகலா புஷ்பா (அதிமுகவிலிருந்து விலகி தற்போது பாஜகவில் உள்ளார்) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டபேரவைச் செயலர் சீனிவாசன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (மார்ச் 6) காலை 11 மணிக்கு முதல் பிற்பகல் 3 மணி வரை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் அட்டவணை

  • மார்ச் 3 ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் தொடக்கம்
  • மார்ச் 13 ஆம் தேதி - வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
  • மார்ச் 16 ஆம் தேதி - வேட்புமனு பரிசீலனை
  • மார்ச் 26 ஆம் தேதி - வாக்குப்பதிவு

இதையும் படிங்க: 'இது ஒருவகை சர்வாதிகாரம்'- குமுறும் காங்கிரஸ் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.