இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ இந்தியாவிற்கு சொந்தமான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில், ” சீன ராணுவத்தினர் 1.5 கி.மீ வரை ஆக்கிரமைத்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன (இந்தியாவின் கருத்துப்படி), மே மாதத்தில், சீன ராணுவத்தினர், இந்தியாவிற்கு சொந்தமான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுமார் ஐந்து கி.மீ வரை ஊடுருவியிருந்தன," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், " யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை, இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை" என்று மத்திய அரசு கூறிவருவது வெறும் வாய்ச்சொல் மட்டுமே என்றும், "இந்தியாவின் ஒரு அங்குலத்தை யாரும் தொட முடியாது" என்ற பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வசீகர வாய்ச்சொல் பேச்சு கலை" என்று மற்றொரு ட்வீடில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ப. சிதம்பரம், "மத்திய அரசு யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளாதவரை, நிலைமை ஒரு மழுப்பலான இலக்காக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.