ETV Bharat / bharat

‘முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜிவ் காந்தி’ - ராகுல் காந்தி புகழாரம் - ராஜிவ் காந்தி

டெல்லி: பிரதமராக இருந்தபோது நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றவர் ராஜிவ் காந்தி என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

Rajiv Gandhi
Rajiv Gandhi
author img

By

Published : May 21, 2020, 4:41 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 29ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. அவரின் நினைவை போற்றும் வகையில் பேசியுள்ள ராகுல் காந்தி, நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசப்பற்று மிக்கவரின் மகன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். இரக்கக் குணம், பரந்த கொள்கையை உடையவர் என் தந்தை.

அவர் பிரதமராக இருந்தபோது, நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றார். முற்போக்கு கொள்கை கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாசம், நன்றி ஆகியவற்றை கொண்டு அவரை வணங்குகிறேன்.

அவர் ஒரு சிறந்த தந்தை. கனிவான அன்புமிக்க இரக்கக் குணம் கொண்ட அவர் பொறுமை மிக்கவர். நான் அவரை இழந்து வாடுகிறேன். நினைவுகளை சுமந்து கொண்டு என் இதயத்தில் எப்போதும் அவர் உயிரோடு இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி நினைவு தினம் : மாலை அணிவித்து மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.