ETV Bharat / bharat

கேரள முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ் - கேரள முதலமைச்சர்

சென்னை: திருவனந்தபுரத்தில் உயிரிழந்த பத்திரிக்கையாளரின் தாயாரை சொந்த ஊரில் அடக்கம் செய்ய கேரள முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும் என, நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Lawrence
Lawrence
author img

By

Published : May 8, 2020, 11:29 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பத்திரிக்கையாளர் அசோக். இவரின் தாாயார் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அசோக்கின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது கரோனா அச்சம் காரணமாக, உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மாண்புமிகு கேரள முதலமைச்சருக்கு வணக்கங்கள். கரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியைக் கண்டு வியக்கிறேன். ஒருமுறை எனது தாயாருடன் தங்களைச் சந்தித்து நிவாரணத்தொகை வழங்கியதையும், பெருமையாக கருதுகிறேன்.

ஒரு சிறிய வேண்டுகோளை தங்களிடம் முன்வைக்கிறேன். திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, நேற்று (மே 7) மாலை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதிக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கரோனாவால் அவரால் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறார். அசோக் என்பவர் தாயை இழந்து கதறுவது குறித்து, மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்களின் மூலம் எனது உதவியாளர் புவனிடம் இருந்து சம்ந்தபட்ட நபரின் ஆடியோவை கேட்டு மிகுந்த துயருற்றேன்.

ஒரு சிறிய வேண்டுகோளாக, அவரது தாயாரின் உடலை மருத்துவமனையிலிருந்து தமிழ்நாட்டிற்கு எடுத்துச்செல்ல உடனடியாக தாங்கள் அனுமதிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய பணத்தை ஓரிரு நாளில் நானே செலுத்திவிடுகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.