வட இந்தியாவில் செயல்பட்டுவரும் பொதுத் துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாகவுள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 168
பணி: சிறப்பு அலுவலர் (Specialist Officer)
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக், ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.826 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.177 செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இணையதளத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் www.psbindia.com என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து முழுமையான விவரங்களை அறிய https://www.psbindia.com/system/uploads/recruitment/ADVERTISEMENT23232323232.pdf என்ற முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி:10.10.2019
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 பேருக்கு வேலை