ETV Bharat / bharat

வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்!

அமிர்தசரஸ்: மத்திய அரசால் சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு பஞ்சாப் மாநிலம் தேவதாஸ்புரா கிராமத்தில் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.

  வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்!
வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம்!
author img

By

Published : Oct 23, 2020, 1:46 PM IST

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது எதிர்ப்பாளர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

வேளான் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான இதேபோன்ற போராட்டங்கள் உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன.

இந்த வேளாண் திருத்தச் சட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் 'மண்டி'களுக்கு வெளியே விளைபொருள்களை விற்க அனுமதிப்பதன் மூலமும், வேளாண் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலமும், முக்கிய பொருள்களின் மீதான பங்கு வைத்திருக்கும் வரம்புகளை நீக்குவதன் மூலமும் விவசாயிகள் அதிக பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020. விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, 2020. விவசாய பொருட்கள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் , 2020 ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.