ETV Bharat / bharat

ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டும் பயனில்லை! சிறுவன் பலி - சங்கரூர்

சண்டிகர்: சங்கரூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் 109 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று காலை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

borewell
author img

By

Published : Jun 11, 2019, 8:44 AM IST

Updated : Jun 11, 2019, 10:17 AM IST

பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் ஜூன் 6ஆம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் அருகில் சணல் சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் கால் தடுக்கி விழுந்தான். தகவலறிந்து அங்குவந்த மீட்புக் குழுவினர், உள்ளூர் நிர்வாகம் இணைந்து அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இணையாக குழியைத் தோண்டி, அதன்மூலம் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர்.

ஆனால், சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணறானது 9 இன்ச் டயா மீட்டர் அளவு கொண்டதால், அவனால் சிறிதளவுகூட நகர முடியாத நிலை இருந்தது. அதனால், அத்திட்டம் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி அதிகாலை வரை கிட்டத்தட்ட 40 மணிநேரம் வரை சிறுவனின் செயல்பாடுகளை அலுவலர்கள் கவனித்துக்கொண்டே இருந்தனர்.

  • #WATCH Punjab: Two-year-old Fatehveer Singh, who had fallen into a borewell in Sangrur, rescued after almost 109-hour long rescue operation. He has been taken to a hospital. pic.twitter.com/VH6xSZ4rPV

    — ANI (@ANI) June 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையில் குழந்தைக்கு சுவாச சிக்கல் ஏற்படாத வகையில், ஒரு சிறிய குழாய் மூலம் பிராணவாயு வழங்கப்பட்டது. மேலும், சிறுவனை அலுவலர்கள் கண்காணிப்புக் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ஆனால், சிறுவனின் முகம் சணல் பையால் மூடப்பட்டிருந்ததால், உணவு எதுவும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

முன்னதாக, மீட்புக் குழுவினர் குழந்தையை கயிறு மூலம் வெளியே கொண்டுவர நினைத்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 109 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே இணையாக தோண்டப்பட்ட குழியின் வழியாக பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டான். பின்னர், உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

  • Punjab CM Cpt Amarinder Singh tweets, "Very sad to hear about tragic death of young Fatehveer. I pray Waheguru grants his family strength to bear this huge loss. Have sought reports from all DCs regarding any open bore well, so such terrible accidents can be prevented in future." pic.twitter.com/9aLrDI21zc

இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுவனின் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Intro:Body:

https://twitter.com/ANI/status/1138251268013432834

Conclusion:
Last Updated : Jun 11, 2019, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.