புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகர், முத்துராமலிங்க செட்டி தெரு ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயணசாமி, எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அரசின் குற்றங்களை சுட்டிக்காட்டாமல் எங்களை எதிர்க்கட்சியாக பார்த்து செயல்படுகிறது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசுகையில், நான் தப்பித்தவறி இந்தத் தடவை முதலமைச்சராகிவிட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆம், நான் தப்பித்தவறி வந்ததால்தான் புதுச்சேரி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இல்லையெனில் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கும் என்று கூறினார்.