புதுச்சேரி பொதுமக்கள்களின் ரேசன் கார்டுகளுக்கு இலவச அரிசுக்குப் பதிலாக பணம் வழங்கி அதனை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அவரின், உத்தரவை ஏற்ற மத்திய அரசு அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி முதலமைச்சர் சார்பில், "புதுச்சேரி அமைச்சரவை தீர்மானத்தை மீறி துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மாற்றக்கூடாது" என வாதிடப்பட்டது.
பின்னர் மத்திய அரசு சார்பில், "யூனியன் பிரசதேசத்தின் முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உரிமையில்லை எனவும், மக்கள் அரிசிக்கு பதிலாக பணத்தை பெறுவதை தடுக்கும் உள்நோக்கத்தின் காரணமாகவே வழக்கு தொடரப்பட்டதாகவும்" வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்
இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள புதுவைக்கு வருகைதரும் வெங்கையா நாயுடு