புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்பு - காமராஜ் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார்
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் புதிய சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜான் குமார் அபார வெற்றிபெற்றார். மற்ற இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: புதுச்சேரி மாநில இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் வெற்றி
இதையடுத்து ஜான் குமார் பதவியேற்பு விழா, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி ஜான் குமாருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை சபாநாயகர் பாலன், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அரசு கொறடா அனந்தராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெங்கடேசன், சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர், காங்கிரஸ் பிரமுகர்கள், திமுக, இடதுசாரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி - குருத்தோலை விழாவில் நாராயணசாமி பங்கேற்பு
Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் அமோக வெற்றி பெற்றதாக புதுவை மாநில தேர்தல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட ஜான் குமார் பதவி ஏற்பு விழா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது இதில் அவர் பதவியேற்றுக்கொண்டார் இதற்கான நிகழ்வு சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் இதையடுத்து முதல்வர் நாராயணசாமி புதிய சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் இந்நிகழ்வில் துணை சபாநாயகர் பாலன் அமைச்சர்கள் நமச்சிவாயம் ,கந்தசாமி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அரசு கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற செயலர் வின்சன்ட் ராயர் ,காங்கிரஸ் பிரமுகர்கள் திமுக இடதுசாரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் அவருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்