ETV Bharat / bharat

புதுச்சேரியில் மேலும் 24 பேருக்கு கரோனா!

author img

By

Published : Jul 3, 2020, 4:34 PM IST

புதுச்சேரி: மாநிலத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

puducherry-health-minister-malladi-krishnarao-about-corona-infection

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள காணொலியில், "புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணிவரை மாநிலத்தில் 633 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 19 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும், 4 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர் காரைக்கால் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த 93 வயது மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 824 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 427 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 384 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 13 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இன்று ஒரே நாளில் 55 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

எனவே, மக்கள் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தகுந்த இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.