புதுச்சேரி மாகே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அபுதாபிக்குச் சென்றுவிட்டு கோழிக்கோடு விமான நிலையம் வழியாக மீண்டும் இந்தியா திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அவருடைய ரத்த மாதிரியை மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாகே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதலால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.
புதுச்சேரியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனைக்குத் தேவையான பொருள்களை வாங்க முதலமைச்சரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு 18 கோடி ரூபாய் அரசு செலவிட உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பீதி : வெறிச்சோடி கிடக்கும் சுற்றுலாத் தளங்கள்!