புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் அசுத்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஆய்வு செய்து கழிவறையை சுத்தமாக பராமரிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.
இதற்கு முன்பு ஆய்வுக்குச் சென்றபோது மருத்துவர்களிடமும், செவிலியர்களிடமும் ஆலோசனை செய்துவிட்டு கிளம்புவார். ஆனால் இந்த முறை ஆய்வுக்குச் சென்றபோது, கழிவறை அசுத்தமாக இருப்பதைக் கண்டு, அவரே சுத்தம் செய்யத் தொடங்கினார்.
மேலும், அங்கிருந்த தூய்மைப் பணியாளரிடம் இதைப் போன்று சுத்தம் செய்யும்படி வலியுறுத்தினார். மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த செயலைக் கண்டு அங்கிருந்த நோயாளிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - ஆர்.கே.செல்வமணி