இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரியில் தற்போது கரோனா நோய்த்தொற்று குறைந்துவருகின்றது. கரோனா தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்க புதுச்சேரி மாநிலத்தில் 55 இடங்களைத் தயார்செய்து இருக்கிறோம். கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் பரிசோதிக்கப்பட்டுவருகின்றது.
மேலும் கோவாக்சின் மருந்தின் விலையை குறைத்து கொடுக்க வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கேட்டு இருக்கிறோம், 10 தினங்களில் தடுப்பு மருந்து கிடைக்கும். கரோனா தடுப்பு மருந்தை நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக மருந்து வழங்கப்படும் என மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். அப்படி மத்திய அரசு இலவசமாக கொடுத்தால் வாங்குவோம் இல்லையெனில் மாநில நிதியிலிருந்து வாங்குவோம்.
முதல்கட்டமாக மருத்துவக் களப்பணியாளர்கள் 14,000 பேருக்கு மருந்து போடப்படும், இரண்டாம் கட்டமாக காவல் துறை, வருவாய்த் துறை என முன்களப் பணியாளர்களுக்கு மருந்து போடப்படும்.
மூன்றாவதாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நீரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் மருந்து போடப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி விலை குறித்து சீரம் நிறுவனம் தகவல்