ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம் நாத் ஹோட்டல் அருகே சில கைவிடப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவ்வாறு கைவிடப்பட்ட வீடு ஒன்றில் 20 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் மண்டை ஓட்டை வறுத்து சாப்பிட்டுள்ளார். மேலும், அப்பகுதி மக்கள் இது குறித்து கண்டறிந்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கடந்த சில நாட்களாகலே அந்த இளைஞர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு அவர் இருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அந்த மண்டையோடு இடுகாடுகளில் இருந்து எடுக்கப்பட்டதா அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் யாரையாவது கொலை செய்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருடன் வசித்து வந்த இளம் பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மூணாறு நிலச்சரிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 58ஆக உயர்வு