ETV Bharat / bharat

போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி - ஊழியர் தற்கொலை

புதுச்சேரி: போக்குவரத்து கழகத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஐஎன்டியூசி தொழிற்சங்க துணைத்தலைவர் சத்தியநாராயணன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற் சங்க துணைத்தலைவர் சத்தியநாராயணன்
author img

By

Published : Mar 26, 2019, 3:09 PM IST

புதுச்சேரி அரசுத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த முன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்றுக்கூறி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக பலமுறை நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று கூறி ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த துணைத்தலைவர் சத்தியநாராயணன் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .இதை பார்த்த சக ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி

இதையடுத்து அங்கு வந்த போலீசார் சத்திய நாராயணனிடம் விசாரணை நடத்தியதில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதனை வழங்காததால் விரக்தியடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். அரசு அலுவலகம் முன்பு ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற் சங்க துணைத்தலைவர் சத்தியநாராயணன் தீக்குளிக்க முயற்சித்தார்

Body:புதுச்சேரி அரசுத்துறை நிறுவனமான புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்திற்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஊதியம் வழங்கவில்லை என்று அத்துறை ஓட்டுநர்கள் ,நடத்தினார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நிர்வாகத்தினரும் முறையிட்டும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று கூறி இந்த அரசு போக்குவரத்து கழகத்தின் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தை சேர்ந்த துணைத்தலைவர் சத்தியநாராயணன் இன்று அலுவலகம் வந்த அவர் அங்கு வாசலில் தன் உடலில் மேல் தான் எடுத்து வந்த பெட்ரோல் பாட்டிலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் .இதை அறிந்த சக அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் ,கடந்த மூன்று மாதங்களாக அங்கு பணிபுரிந்து வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதாகவும் அதனை வழங்காததால் விரக்தியில் சத்திய நாராயணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அரசு ஊழியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற் சங்க துணைத்தலைவர் சத்தியநாராயணன் தீக்குளிக்க முயற்சித்தார் அவரை சக ஊழியர்கள் அப்போது மீட்டனர் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.