புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படாததைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி, ட்வீட் செய்துள்ளார். அதில், “வெளி மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் செல்ல அம்மாநில அரசு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
காசியாபாத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்குச் செல்ல காத்திருக்கிறார்கள். உத்தரப் பிரதேச அரசிடம் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. அவர்களை கொண்டுச் செல்வதற்கான முறையான நடைமுறைகளை ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவப்பட்டிருந்தால், தொழிலாளர்கள் இவ்வளவு சிரமத்திற்குள்ளாகி இருக்க மாட்டார்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
-
प्रवासी मजदूरों की भारी संख्या घर जाने के लिए गाजियाबाद के रामलीला मैदान में जुटी है। यूपी सरकार से कोई व्यवस्था ढंग से नहीं हो पाती। यदि एक महीने पहले इसी व्यवस्था को सुचारू रूप से किया जाता तो श्रमिकों को इतनी परेशानी नहीं झेलनी पड़ती।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
कल हमने 1000 बसों का सहयोग देने की ..1/2 pic.twitter.com/06N47gg94T
">प्रवासी मजदूरों की भारी संख्या घर जाने के लिए गाजियाबाद के रामलीला मैदान में जुटी है। यूपी सरकार से कोई व्यवस्था ढंग से नहीं हो पाती। यदि एक महीने पहले इसी व्यवस्था को सुचारू रूप से किया जाता तो श्रमिकों को इतनी परेशानी नहीं झेलनी पड़ती।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 18, 2020
कल हमने 1000 बसों का सहयोग देने की ..1/2 pic.twitter.com/06N47gg94Tप्रवासी मजदूरों की भारी संख्या घर जाने के लिए गाजियाबाद के रामलीला मैदान में जुटी है। यूपी सरकार से कोई व्यवस्था ढंग से नहीं हो पाती। यदि एक महीने पहले इसी व्यवस्था को सुचारू रूप से किया जाता तो श्रमिकों को इतनी परेशानी नहीं झेलनी पड़ती।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 18, 2020
कल हमने 1000 बसों का सहयोग देने की ..1/2 pic.twitter.com/06N47gg94T
மேலும், “வெளி மாநிலங்களில் தவித்துவந்த தொழிலாளர்களை நேற்று (மே 17) நாங்கள் ஆயிரம் பேருந்துகள் ஏற்பாடு செய்து அவர்களை உத்தரப் பிரதேச எல்லைக்கு அழைத்து வந்தபோது, மாநில அரசு அரசியல் செய்யத் தொடங்கியது. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை உத்தரப் பிரதேச எல்லைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ அரசாங்கம் தயாராக இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டுச் செல்வதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளை உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை முன்பு 60க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் திரண்டதால் பரபரப்பு!