இது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "பாஜக அரசு சோன்பத்ரா படுகொலையை தடுக்க தவறிவிட்டது. குற்றம் செய்தவர்களுக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தவறவிட்டது. படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்க்கச் சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர்.
பிரியங்கா இருக்கும் இடத்தில் அவருக்கு குடிநீர், மின்சாரம் வழங்காமல் அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். அவரை உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற அம்மாநில அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
யோகி ஆதித்யநாத் அரசு அங்கு ரவுடிகளின் ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது. குற்றங்களின் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறிக் கொண்டிருக்கிறது.
பிரியங்கா காந்தி விதிமீறலில் ஈடுபடவில்லை. குற்றவாளிகளை தடுப்பதற்கு பதில் அங்கு உயிரிழந்தவர்களை பார்க்க செல்பவர்களை உத்தரப் பிரதேச அரசு கைது செய்துவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோன்பத்ரா படுகொலையில் உயிரிழந்தவர்களை பார்க்கச் சென்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உத்தரப் பிரதேச அரசு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.