தனியார்வசம் ஒப்படைக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்படும் இடத்தை அதை இயக்குபவர்களே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ள இந்திய ரயில்வே, நிறுத்துமிடம் குறித்து முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ரயில்களை இயக்கும் பணிகளில் இவை முக்கிய பங்கு வகிப்பதால், ரயில்களை நிறுத்தும் இடம் குறித்து முன்பே அறிவிக்க வேண்டும் எனவும், அந்த ஒரு ஆண்டு காலத்துக்கு மாற்றப்படாது எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
தனியார்வசம் ஒப்படைக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்படும் நேரம், அதன் நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டிய நேரம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான நேரம் உள்ளிட்ட பல விவரங்களை இந்திய ரயில்வே கேட்டுள்ளது.
2023 முதல் தனியார் ரயில்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். அதுவும் அப்போதைய சூழலைப் பொறுத்து தனியார் நிறுவனங்களே ரயில் கட்டணங்களை முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ரயில்களில் பயணிக்க வசூலிக்கப்படும் பயணச் சீட்டுக் கட்டணங்களில் இந்திய ரயில்வேக்கு ஒரு பங்கு உள்ளது என ரயில்வே துறையின் ஒப்பந்தம் தெரிவிக்கிறது.