ஜப்பானிலுள்ள ஒசகா நகரில் வரும் ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் ஜப்பானிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், தென் கொரியா அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார்.
மேலும் ஜெர்மனி அதிபர் அதிபர் அங்கேலா மேர்க்கெல், உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோரையும் நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.