ETV Bharat / bharat

குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

President Ram Nath Kovind gives his assent to The Citizenship (Amendment) Act, 2019

author img

By

Published : Dec 13, 2019, 7:03 AM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து நிலவிவந்தது.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இதனையடுத்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இன்றுமுதல் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 அமலிலிருக்கும்.

இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!

Intro:திண்டுக்கல் 12.12.2019

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.
Body:திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகில் உள்ளது திருமலைராயபுரம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே கற்றுதரப்பட்டுகிறது.

கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை சாந்தோம் மாண்ட்போர்ட் உள் விளையாட்ரங்கில் தமிழ்நாடு, கல்கத்தா, அமெரிக்கா, நேபாள், இலங்கை, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றது. வயது அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம், 12 வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

தங்களது வெற்றியால் பள்ளிக்கு பெருமை சேர்த்த இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பாராட்டினார். மேலும், அரசு பள்ளி மாணவர்கள் சர்வதேச போட்டியில் பங்கு பெற்று 10ககும் மேற்பட்ட தங்கப்பதக்கம் பெற்றிருப்பது பிற அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஊக்கமளிக்க கூடிய விஷயமாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.