ETV Bharat / bharat

உரிமைகளும் கடமைகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் - குடியரசுத் தலைவர்

டெல்லி: அரசியல் சாசனம் குடிமக்களுக்கு தந்துள்ள உரிமைகளும் கடமைகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என அரசியல் சாசன தின நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Ramnath Kovind
Ramnath Kovind
author img

By

Published : Nov 26, 2019, 2:43 PM IST

70ஆவது அரசியல் சாசன தினத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் அரசியல் சாசனத்தின் சிறப்பு காணொலியைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதன்பின் பேசிய கோவிந்த், ”இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் அடித்தளம் இந்திய அரசியல் சாசனத்தில் அமைந்துள்ளது. தற்போதைய மக்களவையில் இதுவரை இல்லாதளவிற்கு அதிகபட்சமாக 78 பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது இந்திய ஜனநாயகத்தின் பெருமை.

70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் சாசனத்தைப் பாதுகாத்து வரும் குடிமக்களுக்குப் பாராட்டுகள். இந்திய அரசியல் சாசனம் நமக்குத் தந்துள்ள உரிமைகளும் கடைமைகளும் நாணயத்தின் இரு பக்கங்கள். இதை சரியான முறையில் பேணுவது நாட்டு மக்கள் அனைவரின் கடமை என்றார்.

இதையும் படிங்க: பிரபாகரன் - விடுதலைக்காக ஏங்கும் மனிதர்களின் அடையாளம்...! #HBDPrabhakaran65

Intro:Body:

President Ram Nath Kovind addresses the Parliament: I convey my warm greetings on the occasion of 70th anniversary of the adoption of the ‘Constitution of India’, to all of you, and to all our fellow citizens in India and abroad. #ConstitutionDay

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.