இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்குள்தான் நமது நடவடிக்கைகள் இருந்தன. கல்வான் பள்ளத்தாக்கு குறித்த பேச்சுவார்த்தையின்போது சீனா திட்டமிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியது. அங்கு நடந்த வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் சீனாதான் பொறுப்பு என தெரிவித்தார்.
மேலும் அவர், எல்லை பகுதிகளில் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி நிலவ வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறோம். அதே சமயம் நேற்று பிரதமர் மோடி குறிப்பிட்டதுபோல், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்வதில் தயங்கமாட்டோம் என்றார்.
ரஷ்யா - இந்தியா - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதை இந்தியா உறுதி செய்திருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.