ETV Bharat / bharat

செப்டம்பர் 15இல் அஞ்சல் துறை தேர்வு - செப்டம்பர் 15

டெல்லி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட அஞ்சல் துறை தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PostalExam
author img

By

Published : Jul 31, 2019, 10:11 AM IST

இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றுவந்தது. அதன்படி தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் தேர்வு நடைபெற்றது.

ஆனால் கடந்த ஜூலை 14ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சல் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. இதற்கு இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பின.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர். மேலும், இதனைக் கண்டித்து மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார். அத்துடன் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என இந்திய அஞ்சல் துறை இன்று அறிவித்துள்ளது. மேலும் அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்காகவும் இந்தத் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15ஆம் தேது நடக்கிறது இந்தி பேசாத மாநிலங்களில் அம்மாநில மொழிகளில் தபால்தேர்வு நடைபெறும் - தபால்துறை அறிவிப்பு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.