புதுச்சேரியில் 29 ஆரம்ப சுகாதார நிலையமும், மூன்று அரசு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வக தொழில்நுட்ப செவிலியர் (Lab-technician), மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 610 பேர் தினக்கூலி ஊழியர்களாகப் பணியில் உள்ளனர்.
அவர்களுக்கு இதுநாள்வரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என்றும் அதில் ஒரு பகுதியினருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதார இயக்கம் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள்களாக சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தின்போது சுகாதார இயக்கம் ஊழியர்கள் சங்கத்தினர் புதுச்சேரி அரசு 2017ஆம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை ஊழியர்கள் நிரந்தப் பணியாளர்கள் நியமனத்தில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்குவதாகக் கொள்கை முடிவு எடுத்தது, ஆனால் இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது.
எனவே அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி சுகாதார இயக்கம் ஊழியர்கள் சங்கத்தினர் மூன்றாவது நாளாக இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி