கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் நாகராஜய்யா (வயது 38). இவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு (நவ.30) கஞ்சா போதையில் இருந்த மர்தான் கான் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். தற்போது நாகராஜய்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரின் உடலில் இரண்டு இடங்களில் பெரிய அளவில் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவலரை கத்தியால் குத்திய கஞ்சா ரவுடி மர்தான் கானை பிடிக்க காவலர்கள் சந்துரு தலைமையில் மஃப்டியில் சுற்றி திரிந்தனர். இந்த நிலையில் மர்தான் கான் சாமுண்டி நகரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவலர்கள் அவரை பிடிக்க சுற்றி வளைத்தனர். அப்போது மர்தானின் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் காவலர்களை தாக்க முயற்சித்தார். இதையடுத்து அவனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் மர்தான் கானின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அ
அவருடன் சேர்ந்து கஞ்சா புகைக்கும் கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ரவுடி மணிகண்டனை தற்காப்புக்காக தான் சுட்டனர்' - என்கவுன்டர் குறித்து எஸ்.பி பேட்டி