மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் 750 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய சோலார் மின் உற்பத்தித் தொழிற்சாலையான இதை பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.
இந்த நிகழ்வில் மத்திய எரிசக்தித் துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். உலகின் முன்னணி நாடுகளை இணைத்துச் சர்வதேச சோலார் கூட்டணி என்ற அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார்.
தூய்மையான மாற்று எரிசக்தியை முன்வைப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கமாகும். இதை நடைமுறைப்படுத்தும் விதமாகவே ஆசியாவின் மிகப் பெரிய சோலார் எரிசக்தி ஆலை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா முடிவதற்குள் சீனாவில் பரவும் அடுத்த கொடூரத் தொற்று!