சென்னையிலிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே நீர்மூழ்கி கண்ணாடி ஒளியிழை கேபிள் (optical Fiber) இணைப்பு திட்டம் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கப்பட உள்ளது. அதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக.10) தொடங்கிவைக்கிறார்.
நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள் என்பது தீவுகளுக்கு இடையே தகவல் தொலைதொடர்பு சமிக்ஞைகளை பகிர்ந்துகொள்ள கடலுக்கு அடியில் போடப்படும் இணைப்பாகும்.
இந்தத் திட்டம் சென்னையிலிருந்து போர்ட் பிளேர் மற்றும் ஸ்வராஜ் டீப்(ஹேவ்லாக்), லாங் ஐலேண்ட், ரங்காட், ஹட்பே (லிட்டில் அந்தமான்), கமோர்டா, கார் நிக்கோபார் மற்றும் காம்ப்பெல் பே (கிரேட் நிக்கோபார்) ஆகிய ஏழு தீவுகளுக்கு சிறந்த தகவல் இணைப்பை அளிக்கும் என எதிர்பார்க்கிறது.
இதையும் படிங்க: 'கிசான் ரயில் சேவை மூலம் அனைத்து இந்திய விவசாயிகள் பயன்பெறுவர்!'