பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில், அழகிய குழந்தை ஒன்று பிரதமர் நரேந்திர மோடியின் கையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. புகைப்படம் வெளியான சில நொடிகளிலேயே 13 லட்சம் லைக்குகளையும், 16 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்று வைரலானது.
பேரக்குழந்தையை போல் மோடியுடன் தவழ்ந்து விளையாடிய அந்த அதிர்ஷ்டசாலி குழந்தை, பின்பு மோடியின் மடியில் அமர்ந்துகொண்டு பிரதமர் அலுவலக மேசையில் இருக்கும் காகிதங்களை எடுத்து விளையாடியது.
இதனை, மிகவும் முக்கியமான நண்பர் ஒருவர் என்னை சந்திக்க நாடாளுமன்றம் வந்துள்ளார் என்ற கேப்சனில் குறிப்பிட்டு குழந்தையுடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், நாடாளுமன்ற அலுவலகத்தில் விளையாடிய அந்த அதிர்ஷ்டசாலி குழந்தை பாஜக எம்.பி. சத்தியநாராயணனின் பேரக்குழந்தையாகும்.