பிகார் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி புரிந்துவருகிறது. பிகாரின் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் உள்ளார்.
அடுத்த மாதம் (அக்டோபர்) பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா காலத்தில் எவ்வாறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு வாழிகாட்டுதல்களை வெளியிட்டு, அதற்கான பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
கடைசிக்கட்டத்தில் பிகாரில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் ஒன்பது நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மேலும், மாநிலத்தில் இருக்கும் 45,945 கிராமங்களுக்கு ஃபைவர்நெட் எனப்படும் கண்ணாடி இழை மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தையும் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: கரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்தது இந்தியாவில்தான் - சுகாதாரத் துறை