நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட அமர்வு 40 நாட்கள் மேற்கொண்ட தொடர் விசாரணைக்குப் பின் இன்று காலை 10.30 மணியளிவில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
தீர்ப்புக்குப் பின் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க உள்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகளும், கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தீர்ப்பு தொடர்பாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாம் அனைவரும் ஒற்றுமையாக பின்பற்ற வேண்டியது கடமை.
தீர்ப்பு எந்த விதமாக வந்தாலும் அது யாருக்கும் வெற்றியோ தோல்வியோ கிடையாது. இந்த நேரத்தில் நாட்டில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை நிலவ ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகிறேன்' என்றார்.
இதையும் படிங்க: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது