கடந்த ஜூன் மாதம் வழக்குரைஞர் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் "இந்தியாவின் ஜனநாயகத்தை அழிப்பதில்" உச்ச நீதிமன்றம் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என நீதிமன்றத்திற்கு எதிரான கருத்தைப் பதிவிட்டார். இதையடுத்து, நீதிமன்றத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவுகள் பேச்சு மற்றும் கருத்துரிமையைக் கேள்விக்குறியாக்குவதாகக் கூறி மூத்தப் பத்திரிகையாளர் ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனுத்தாகக்ல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், "நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் துணைப் பிரிவான , 1971 பிரிவு 2-சி (i)-இன் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சாசனத்தின் முகப்புரையில் பாதுகாக்கப்படும் கருத்துகளுக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் ஒரு பிரிவானது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 மற்றும் 19-ஐை மீறுவதாக உள்ளது.
இந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவு பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை சுருக்குவதாக உள்ளது. பேச்சுரிமையின் பொருட்டு, நாட்டிற்கு தீங்கு விளைவிக்காத வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினாலும், இந்தச் சட்டம் அவற்றின் எல்லைகளை சுருக்கி வகுக்கிறது. மேலும், பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை நாட்டிற்கு தீங்கானவை என்பதைப்போல காட்டுகிறது.
அதுமட்டுமின்றி, தெளிவான வரம்புகளை வரையறை செய்வதிலும், இந்தப் பிரிவில் சிக்கல்கள் உள்ளன. எனவே, அரசியலமைப்புப் பிரிவு 14-ஐை நாட்டில் சமமாக நடத்த வலியுறுத்துமாறு" தெரிவி்க்கப்பட்டுள்ளது. இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.